விமானத்தில் பீடி புகைத்தவர் கைது

மும்பை : மார்ச் 6 – இண்டிகோ விமானத்தில் பீடி புகைத்த குற்றத்திற்காக நகரின் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுளார். இண்டிகோ விமானத்தில் டெல்லியிலிருந்து மும்பைக்கு பயணித்த மொஹமத் பக்ருதீன் என்பவர் விமான கழிப்பறையில் பீடி பிடித்துள்ளார். பீடி வாசனை அதிகமாக வந்ததால் சந்தேகம் அடைந்த விமான பணி பெண்கள் சோதித்த போது கழிப்பறைக்குள் பீடி கிடைத்துள்ளது. இது குறித்து விசாரணை மேற்கொண்டபோது மொஹம்மத் பக்ருதீன் தான் பீடி குடித்ததை ஒப்புக்கொண்டுள்ளான். பின்னர் விமானம் மும்பை வந்திறங்கியவுடன் அவனை போலீசார் கைது செய்துள்ளனர். தான் ரியாத் நகரில் கூலி வேலை செய்து வருவதாகவும் தன்னுடைய கால் சட்டையில் பீடி மற்றும் லைட்டர் ஒளித்து வைத்திருந்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளான். இதே போல் கடந்த வருடம் மே மாதம் விமானத்தில் பீடி பிடித்த 56 வயது nabar ஒருவரை பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
ராஜஸ்தானின் மார்வார் பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் அஹமதாபாதிலிருந்து ஆகாஷ் ஏர் விமானம் ஏறினார். பின்னர் இவர் கழிப்பறையில் பீடி புகைத்ததை விமான பணி பெண்கள் கண்டு பிடித்தனர்.தான் முதல் முறை விமானத்தில் பயணிப்பதால் சட்ட நியமங்கள் எனக்கு தெரிய வில்லை என அவன் அப்போது போலீசாரிடம் தெரிவித்தான்.