விமானநிலத்தின் கழிப்பறை அருகில் வைர மோதிரம் இருந்த கைப்பை திருட்டு

பெங்களூர் : நவம்பர் . 2 – பெண்மணி ஒருவர் நகரின் கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் கழிப்பறைக்கு செல்லும் முன்னர் வெளியே வைத்திருந்த வைர மோதிரம் மற்றும் ஒரு லட்ச ரூபாய்கள் வைத்திருந்த கைப்பை காணாமல் போயுள்ளது .
டர்மினல் ஒன்று வாயிலிருந்து வெளியேறும் கேட் எண் ஒன்று அருகில் இந்த கைப்பை காணாமல் போயுள்ளது . இது குறித்து பாதிப்புக்குள்ளான பெண்மணி விமான நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 29 அன்று பசவேஸ்வர நகரை சேர்ந்த ஷாலு அகர்வால் என்ற பெண்மணி நகரிலிருந்து அஹமதாபாத்திற்கு பயணம் செய்ய வேண்டியிருந்தது. அதிகாலை 7 மணியளவில் விமான நிலையத்திற்கு வந்திருந்த ஷாலு அகர்வால் பாதுகாப்பு சோதனைகள் முடிந்த பின்னர் வாயில் அருகில் இருந்த கழிப்பறைக்கு சென்றுள்ளார். தன்னுடைய கைப்பையை வெளியில் வைத்து விட்டு சென்றுள்ளார்.
பின்னர் திரும்பிவந்து பார்க்கையில் தன்னுடைய கைப்பை திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த கைப்பையில் ஒரு வைர மோதிரம் ஒரு ஜோடி வைர கம்மல்கள் , மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் இருந்ததாக இவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார் . இதுகுறித்து விமான நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.