விமானப்படை அதிகாரி மகன் கைது

புது டெல்லி : பிப்ரவரி. 28 – குழந்தை மீது கார் ஏற்றி கொலை செய்துள்ள விஷமயமாக விமான படை அதிகாரி ஒருவரின் மகனை நகர போலீசார் கைது செய்துள்ளனர். பைக்கில் சென்றுகொண்டிருந்த போது கார் மோதியதன் விளைவாய் குழந்தை இறந்தது தொடர்பாக இந்திய விமான படை அதிகாரி மற்றும் குழு தலைவர் பரத் மாலிக் என்பவரின் மகன் சமர்க் மாலிக் (20 ) என்பவரை கைது செய்து அவர் ஒட்டி வந்த வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது. குழந்தையின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விமான படை அதிகாரியின் மகனை கைது செய்துள்ளனர். கடந்த பிப்ரவரி 26 அன்று மாலை 5. 20 மணியளவில் ஆர் எம் எல் மருத்துவமனையில் குழந்தை இறந்துள்ளது. குழந்தையின் மரணம் குறித்து போலீசார் தகவல்கள் சேகரித்துள்ளனர். தவிர இது குறித்து முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளி சமர்க் விபத்துநடந்த உடனேயே குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்துள்ளது.