விமானப்படை பயிற்சி மாணவர் சந்தேகத்துக்குரிய நிலையில் தற்கொலை

பெங்களூர்: செப்டம்பர். 23 – விமானப்படை பயிற்சிக்கு வந்திருந்த டெல்லியை சேர்ந்த இளைஞன் தூக்கு மாட்டி சந்தேகத்துக்கிடமான வகையில் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் கங்கம்மனகுடி விமான படை தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நடந்துள்ளது . டெல்லியை சேர்ந்த அங்கித் குமார் (27) என்பவன் தற்கொலை செய்துகொண்டுள்ள பயிற்சி மாணவனாவான் . இறந்து போன இளைஞனின் குடும்பத்தார் அதிகாரிகளுக்கு எதிராக கொலை குற்றம் சாட்டியுள்ளனர். சில வருடங்களுக்கு முன்னர் விமான படை பயிச்சிக்கென நகருக்கு வந்திருந்த அங்கித் குமார் ஜாலஹள்ளியில் உள்ள விமான படை தொழில்நுட்ப கல்லூரியில் பயிற்சி பெற்று வந்தான். சில காரணங்களால் அங்கித்தை அதிகாரிகள் பயிற்சியிலிருந்து இடை நீக்கம் செய்தனர் என தெரியவந்துள்ளது. இதனால் மனம் உடைந்த அங்கித் கடந்த செப்டம்பர் 21 அன்று தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளான் . இது குறித்து ஏ எப் டி சி அதிகாரிகளுக்கு எதிராக அங்கித்தின் குடும்பத்தார் கொலை குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர். .
இதன் படி கங்கம்மனகுடி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.