
வாஷிங்டன்: ஜனவரி 29-
கொலம்பியாவில் எம்பி உள்பட 15 பேர் சென்ற விமானம் விபத்தில் சிக்கி தீப்பிடித்ததில் அதில் இருந்த 15 பேரும் உயிரிழந்துள்ளனர். குகட்ட நகரில் இருந்து புறப்பட்ட விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் அந்நாட்டு விமானப்படை ஈடுபட்டுள்ளது.
வட அமெரிக்க நாடான கொலம்பியாவில் விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. வெனிசுலா எல்லையை ஒட்டிய பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 15 பேர் பலியாகியுள்ளனர்.
கொலம்பியா அரசுக்கு சொந்தமான சதேனா நிறுவனத்தால் இயக்கப்பட்டு வந்த விமானம்தான் விபத்தில் சிக்கியிருக்கிறது.
குகட்ட நகரில் இருந்து புறப்பட்ட விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதனால், விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்ற நிலையில் விமானம் விபத்தில் சிக்கியது தெரியவந்தது. விமானத்தில் பயணம் செய்த அனைவருமே இதில் உயிரிழந்துள்ளனர். அதாவது விமானத்தில் 13 பயணிகளும் 2 சிப்பந்திகளும் என மொத்தம் 15 பேர் இருந்துள்ளனர்.விமானம் விபத்தில் சிக்கிய குகட்ட பகுதி ஏராளமான மலைப்பகுதிகளை கொண்டது ஆகும். அடிக்கடி வானிலை மாற்றமும் நிகழக்கூடிய இடம் என்பதால் மிகவும் சவாலான பகுதியாக அறியப்படுகிறது. குகட்டா பகுதியை கொலம்பியாவில் இயங்கி வரும் தேசிய விடுதலை ராணுவம் என்ற கொரில்லா குழு ஒன்று கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறது.விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் அந்நாட்டு விமானப்படை ஈடுபட்டுள்ளது. விபத்தில் சிக்கியவர்களில் ஒரு எம்பி மற்றும் எம்பி வேட்பாளரும் அடங்குவார் என்று முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறுகையில், விமான விபத்து தொடர்பான தகவல் எங்களுக்கு கிடைத்தது. இதில் எனது சக உறுப்பினர் டியோஜினிஸ் குயிண்ட்ரோ, கார்லோஸ் சல்சிடோ மற்றும அவருடன் பயணித்தவர்கள் பலியாகியுள்ளனர்” என்றார். விபத்தில் சிக்கிய விமானம் பீச்கிராப்ட் 1900- என்ற இரட்டை புரெபல்லர் விமானம் ஆகும்.












