விமான கட்டணத்தில் தள்ளுபடி

பெங்களூர்,செப்.19- இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பேமெண்ட்ஸ் மற்றும் ஃபைனான்சியல் சர்வீஸ் நிறுவனமும், கியூஆர் மற்றும் மொபைல் பேமென்ட்களின் முன்னோடியான பேடிஎம் பிராண்டின் உரிமையாளரும் ஒன்97 கம்யூனிகேஷன் லிமிடெட் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது பண்டிகை காலத்தை முன்னிட்டு, நிறுவனம் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் முன்பதிவு செய்வதில் தள்ளுபடியையும், பஸ் டிக்கெட்டில் கேஷ்பேக் வழங்குகிறது.இதன் மூலம், Paytm மூலம் முன்பதிவு செய்தால், பயனர்கள் உள்நாட்டு விமானங்களில் 18% வரை தள்ளுபடியும், சர்வதேச விமானங்களில் 12% வரை தள்ளுபடியும் பெறலாம்