விமான நிலைய 2வது முனையத்தில் சர்வதேச விமானங்கள் இயக்கம்

பெங்களூர், ஆக . 31-பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெர்மினல் -2 இன்று முதல் இயங்க துவங்கியது.
பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் முனையம்- 2 என்ற டெர்மினல்- 2 ,சர்வதேச விமானங்களை இயக்க தயார் நிலையில் இருந்து வருகிறது.
இன்று வியாழக்கிழமை காலை 10:45 மணிக்கு டெர்மினல்- 2 விமான நிலையம் இயங்குகிறது. இந்த விமான நிலையத்திலிருந்து 27 விமான நிறுவனங்கள் இயங்குவதற்கு முன் வந்துள்ளன.மேலும் இங்கு உலகத் தர வாய்ந்த அனைத்து வசதிகளும் பயணிகளுக்கு கிடைக்கும். பல்வேறு வகையான மரக்கன்றுகள் மூங்கில்களால் அமைக்கப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு மிகுந்த வசதியை ஏற்படுத்தி தரும். இந்த விமான நிலையம் டெர்மினல்- 2 ஆண்டுக்கு 25 மில்லியன் பயனாளிகளை கையாளும் திறன் கொண்டுள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், முதல் வெளிநாட்டு விமானமாக டெர்மினல்- 2க்கு இன்று காலை வந்து சேர்ந்தது.