விமான பயணிகள் அவதி

புதுடெல்லி: மே 31 –
தலைநகர் டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவுக்கு வியாழக்கிழமை அன்று செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் சுமார் 24 மணி நேரம் தாமதமானதாக பயணிகள் தெரிவித்தனர். இது குறித்து சமூக வலைதளங்களில் அவர்கள் பதிவிட்டனர்.
ஏசி இல்லாத சூழல், தரையில் காக்க வைக்கப்பட்ட நிலை, மயங்கிய நிலையில் பயணிகள் என அந்த பதிவுகளில் விமான நிறுவனத்தின் மீது பயணிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இந்த மோசமான அனுபவத்தையும் பகரிந்துள்ளனர். அந்த விமானம் ஆபரேஷனல் சிக்கல் காரணமாக தாமதமானதாக தகவல்.தனியார்மயமாக்கலின் தோல்வி என்றால் அது ஏர் இந்தியா கதை தான். ‘ஏஐ 183’ விமானம் 8 மணி நேரம் தாமதமாகி உள்ளது. ஏசி இயங்காத விமானத்துக்குள் பயணிகள் அமர வைக்கப்பட்டனர். சிலர் மயங்கிய நிலையில் அனைவரும் தரையிறக்கப்பட்டோம். இது மனிதாபிமானமற்றது” என பத்திரிகையாளர் ஸ்வேதா தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்தார்.