விரலுக்கு பதில் நாக்கில் அறுவை சிகிச்சை செய்த டாக்டர் சஸ்பெண்ட்

கோழிக்கோடு, மே 18 கடந்த வியாழன், நான்கு வயது சிறுமி அறுவை சிகிச்சைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது கையிலிருந்து ஆறாவது விரல் அகற்றப்படுவதாக இருந்தது. சில மணிநேரம் கழித்து அறுவை சிகிச்சை அறையிலிருந்து சிறுமி வெளியே அழைத்து வரப்பட்டபோது அவரது வாய் பகுதியில் பஞ்சு திணிக்கப்பட்டிருந்ததைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். குடும்பத்தினர் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். விசாரணையில், கையில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சை யைத் தவறுதலாக மருத்துவர்குழந்தையின் நாக்கில் செய்து
விட்டது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த செய்தி கேரளா முழுவதும் பரவி பொதுமக்களிடையே பெறும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கேரள மருத்துவக் கல்லூரி இயக்குநரிடமிருந்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜுக்கு சம்பவம் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. வழக்கு பதிவு இந்த விவகாரத்தில் தலையிட்ட கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் சம்மந்தப்பட்ட மருத்துவர் பிஜான் ஜான்சனை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார். மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தும்படியும், மருத்துவமனையின் நெறிமுறைகளை கராராகக் கடைப்பிடிக்கும்படியும் ஆணையிட்டார்.இந்நிலையில், சிறுமியின் குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்ததை அடுத்து, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய குற்றத்துக்காக சட்டப்பிரிவு 336 மற்றும் 337-ன் கீழ் மருத்துவர் பிஜான் ஜான்சன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுபொறுப்பேற்க வேண்டும்: பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் கூறுகையில், “எங்கள் குழந்தையின் நாக்கில் எந்தவித சிக்கலும் இல்லை. ஒருவேளை இந்த தவறான அறுவைசிகிச்சையினால் சிறுமிக்கு பாதகமான விளைவு ஏற்படுமேயானால் மருத்துவமனை அதிகாரிகள்தான் அதற்கு முழுபொறுப்பேற்க வேண்டும். அரசு
மருத்துவமனையில் இத்தகைய கொடூரமான அனுபவம் இனி எவருக்கும் நேர்ந்துவிடக்கூடாது” என்றனர்.மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டதாவது: “ஒரே நாளில் இரண்டு குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சைக்கான நேரம் குறிக்கப்பட்டதினால் ஏற்பட்ட குழப்பத்தின் விளைவு இது” என்றனர்.