விரைவில் சப்-இன்ஸ்பெக்டர் நியமன மறுத்தேர்வு

பெங்களூர் : ஆகஸ்ட். 3 – தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் (பி எஸ் ஐ ) நியமனத்திற்கு மறு தேர்வுகள் விரைவில் நடத்தப்படும் என மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார். பி எஸ் ஐ பதவிகளை எதிர்நோக்கி காத்திருக்கும் வேட்பாளர்களுக்கு இது குறித்து நம்பிக்கை அளித்திருப்பதுடன் மறு தேர்வுகள் நடத்த விரைவிலேயே அரசு முடிவு மேற்கொள்ள உள்ளது என அமைச்சர் தன் வீட்டில் தன்னை சந்தித்த நிருபர்களிடம் தெரிவித்துள்ளார். பி எஸ் ஐ நியமன தேர்வுகளில் அக்கிரமங்கள் நடந்திருப்பது குறித்து சி ஐ டி போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த நடவடிக்கைகள் முடிந்த பின்னர் மறு தேர்வுகள் நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றார். தற்போது ரத்து செய்யப்பட்ட தேர்வுகளை எழுதியவர்கள் மற்றும் இந்த மோசடிகளில் ஈடுபட்ட அனைத்து 56 ஆயிரம் வேட்பாளர்களும் மறு தேர்வுகளில் பங்கு கொள்ள தகுதி பெற்றவர்கள் என்பதுடன் இது குறித்து எவ்வித கலக்கமும் தேவையில்லை என அமைச்சர் நம்பிக்கை அளித்துள்ளதுடன் மறு தேர்வுகள் நடத்துவது தாமதிக்கப்பட்டால் தங்கள் தகுதிகளை இழந்துவிடும் பயம் தேவையில்லை. பரீட்சைகளை எதிர்கொள்ள தயாராகுங்கள் என அமைச்சர் தெரிவித்தார்.