விற்பனை விறுவிறுப்பு

சென்னை, ஜன. 13-தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை மறுதினம் கொண்டாட இருக்கிறது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரம் களைகட்ட துவங்கியுள்ளது. ஏராளமான பொதுமக்களும், வியாபாரிகளும் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். கரும்பு ஒன்றின் விலை சராசரியாக ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. மஞ்சள் ஒரு கட்டு ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. பொங்கலுக்கு தேவையாக இஞ்சி, மஞ்சள், தோரணங்கள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.