விலை உயர்வு மோடி கவலை

புதுடெல்லி, ஜனவரி 12: அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து கவலை தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உணவு தானியங்கள், எரிபொருள் மற்றும் உரங்களின் விலை உயர்வு, பருவநிலை மாற்றம் ஆகியவை கவலை அளிப்பதாக உள்ளது என்றார்
தெற்கு உலக உச்சி மாநாட்டில் பேசிய மோடி, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து கவலை தெரிவித்தார். உலகளாவிய சவால்களுக்கு தென் உலக நாடுகள் காரணம் இல்லையென்றாலும், அவை நம்மை பாதிக்கின்றன என்று பிரதமர் மோடி கூறினார்.
ஜி20 தலைவர் பதவியை இந்தியா வகிக்கிறது. இது உலகளாவிய தெற்கின் நாடுகளின் குரலை எதிரொலிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, என்றார்.
போர், மோதல், பயங்கரவாதம் மற்றும் புவி-அரசியல் பதட்டங்கள் ஆகியவை விலைவாசி உயர்வுடன் அதிக கஷ்டங்களைக் கொண்டு வந்துள்ளன. இத்தனை சிரமங்களுக்கு மத்தியிலும் புத்தாண்டில் புதிய திசையை நோக்கி திரும்பியுள்ளோம் என்றார்.
உலகளாவிய தென் நாடுகள் எதிர்காலத்தில் மிகப்பெரிய பங்கைக் கொண்டிருக்கும். உலக மக்கள்தொகையில் 3/4 பேர் நமது நாடுகளில் வாழ்கின்றனர் என்றார்.
உலகளாவிய தென் நாடுகளின் பரஸ்பர மேம்பாட்டு கூட்டாண்மை அனைத்து புவியியல் மற்றும் பல்வேறு துறைகளையும் உள்ளடக்கியது. இந்தியா தனது வளர்ச்சி அனுபவத்தை எப்போதும் பகிர்ந்து கொள்கிறது என்றார்.
கோவிட் பாதிப்பிற்குப் பிறகு நாட்டின் பொருளாதார நிலை மீண்டு வரும் பாதையில் உள்ளது. இருப்பினும், தொடர் பணவீக்கத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விலை உயர்ந்து வருவதே முக்கியக் காரணம்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி ஏற்கனவே ரெப்போ விகிதத்தை 4 முறை உயர்த்தியுள்ளது. ஆனால், பணவீக்கம் அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சி நாட்டின் பொருளாதார நிலையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர் என்றார் மேலும் அவர் கூறும் போது உலகளாவிய அளவில் போர்கள் தீவிரவாதம் உள்ளிட்ட காரணங்களால் தெற்காசிய நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டது என்றார். உலக பொருளாதார மாற்றத்தால் அடுத்த ஒரு கடினமான ஆண்டை நாங்கள் புரட்ட வேண்டி உள்ளது அடுத்த சவால்களையும் எதிர்கொள்ள நாங்கள் தயார்படுத்த வேண்டி உள்ளது என்றார் போர் மற்றும் தீவிரவாதம் காரணமாக விலைவாசிகள் உயர்ந்து வருகிறது பெருமளவில் ஆன போர் மற்றும் தீவிரவாதத்திற்கு தெற்காசிய நாடுகள் காரணம் இல்லை என்றாலும் உலகளாவிய இத்தகைய காரணங்களால் நாங்களும் பாதிக்கப்பட்டு உள்ளோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.