விலை உயர்வு

மயிலாடுதுறை டிச.31
திருவெண்காட்டை சேர்ந்த இல்லத்தரசி அகிலா ராஜேஷ்குமார்:- பண்டிகை மற்றும் கோவில் நிகழ்ச்சிகளில் முதன்மையாக விளங்குவது மல்லிகைப்பூ. பெண்களின் முதன்மை தேர்வாக மல்லிகைப்பூ விளங்குகிறது. தற்போது மல்லிகைப்பூ கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பெண்கள் மல்லிகைப்பூவை வாங்க ஆர்வம் காட்டுவதில்லை. மலர் சந்தையில் சாமந்தி பூ, ரோஜாப்பூ தான் அதிகளவு காணப்படுகின்றன.