வில்லனாக நடிக்க ஆதிக்கு ரூ.4 கோடி

வில்லன் வேடம் ஏற்க ஆதிக்கு ரூ.4 கோடி சம்பளம் பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கதாநாயகர்கள் வில்லன்களாகவும் நடிக்கின்றனர். விஜய்சேதுபதி, அர்ஜூன், அருண் விஜய், கார்த்திக், அரவிந்தசாமி ஆகியோர் வில்லன்களாக நடித்துள்ளனர். ஆர்யா எனிமி படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் லிங்குசாமி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகும் படத்தில் ஆதி வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இதில் நாயகனாக ராம் பொதினேனி நடிக்கிறார். இந்த படத்தில் வில்லன் வேடம் ஏற்க ஆதிக்கு ரூ.4 கோடி சம்பளம் பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பெரிய தொகை என்று திரையுலகினர் வியக்கின்றனர். கதையில் தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருப்பதால் வில்லனாக நடிக்க ஆதி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மிருகம் படம் மூலம் பிரபலமான ஆதி ஈரம், அய்யனார், ஆடுபுலி. அரவான், யூ டர்ன், உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது தமிழில் 2 படங்களிலும், தெலுங்கில் 2 படங்களிலும் நடித்து வருகிறார்.