வில்வித்தையில் வெண்கலப் பதக்கம் வென்றது இந்தியா

பீஜிங், அக். 6- 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர் வில்வித்தையில் பெண்கள் ரிகர்வ் பிரிவில் இந்தியாவின் அங்கிதா பகத், பஜன்கவுர் மற்றும் சிம்ரன்ஜித் கவுர் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர். இந்திய அணி இதுவரை 21 தங்கம், 32 வெள்ளி, 34 வெண்கலம் என மொத்தம் 87 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் இடத்தில் நீடிக்கிறது.