விழுந்த செல்போனை எடுக்கமெட்ரோ தண்டவாளத்தில் குதித்த பெண்

பெங்களூர் : ஜனவரி . 2 – இந்திராநகர் மெட்ரோ மேம்பாலத்தில் விழுந்த மொபைல் போனை எடுக்க இளம் பெண் ஒருவள் ரயில் தண்டவாளத்தில் குதித்ததால் ஊதா நிற மெட்ரோ ரயில் போக்குவரத்து சுமார் 15 நிமிடங்கள் தடைபட்டு பயணிகள் அவஸ்தைக்குள்ளாயினர் . இந்திரா நகரின் மெட்ரோ ரயில் நிலையத்தின் நடைபாதை ஒன்றில் ரயிலுக்காக காத்து நின்ற பெண் ஒருவளின் போன் தண்டவாளத்தில் விழுந்துள்ளது. இதை எடுக்க மின்சாரம் பாயும் தண்டவாளத்தில் ந்த இளம் பெண் போனை எடுக்க தண்டவாளத்தில் இறங்கியுள்ளாள் , இதை கவனித்த மெட்ரோ ஊழியர் உடனே மின் தொடர்பை நிறுத்தியுள்ளர். பின்னர் அந்த இளம் பெண்ணை மேலே தூக்கியுள்ளனர். இதனால் உச்சகட்ட நேரத்தில் 15 நிமிடங்கள் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் இந்த பகுதியில் பயணித்த ஆயிரக்கணக்கான மெட்ரோ ரயில் பயணிகளுக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அளித்த பெங்களூர் மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குனர் ஏ எஸ் ஷங்கர் தெரிவிக்கையில் இந்திராநகர் மெட்ரோ ரயில் நிலைய நடைபாதை ஒன்றில் பையப்பனஹள்ளி மார்கமாக சென்றுகொண்டிருந்த இளம் பெண் ஒருவர் மாலை 6. 40 மணியளவில் ரயில் தண்டவாளத்தில் தன் போனை தவறி விழ வைத்துள்ளாள் . ரயில் வருவதற்கு முன்பாக அதை எடுக்க தண்டவாளத்தில் இறங்கியுள்ளாள் . ஆனால் அவளால் மீண்டும் மேலே என்ற முடிய வில்லை. பின்னர் அங்கிருந்த மற்ற பயணிகள் அவளை மேலே தூக்க முயற்சித்துள்ளனர். பின்னர் இதை பார்த்த மெட்ரோ ரயில் ஊழியர் ஒருவர் உடனடியாக ரயில் தண்டவாளங்களின் மின் தொடர்பை நிறுத்தியுள்ளார். இந்த நிலையில் இந்திராநகரில் நடந்த இந்த விபத்தில் இருந்து இளம் பெண் மீண்டிருந்தாலும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டனர்.தவிர மெட்ரோ நிர்வாகத்தின் சி சி டி வி அந்த இளம் பெண்ணின் முகத்தை பதிவு செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எந்த நிலையத்திற்கு அவள் வந்தாலும் எங்களுக்கு தெரிய வரும். இந்த நிலையில் மின்சாரம் தடைப்பட்டதால் இந்த பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் இப்பகுதியில் ரயில் போக்குவரத்து உச்சகட்ட நேரமான 6.40 முதல் 6. 55 வரை பாதிப்புக்குள்ளானது. என்றார்.