விவசாயிகள் போராட்டம்

பெங்களூர், பிப். 27-
பெங்களூர் சிவராம் கரந்தா லேஅவுட் பகுதியை மேம்படுத்துவதற்காக விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த காய்கறிகள், பழங்கள், ஆகியவற்றை புல்டோசர் வைத்து அகற்றியதை கண்டித்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிவராம் கரந்த் லேஅவுட் பகுதியை 2008 ம் ஆண்டில் 17 கிராமங்கள் உள்ளடக்கி, 3 ஆயிரத்து 546 ஏக்கர் கொண்டதாக உருவாக்கினர்.இதில் எலஹங்கா கங்கமானகுடி, சோழ தேவன ஹள்ளி ராஜானுக்குண்டே, வித்யரண்யபுரா ஆகிய பகுதிகளும் உள்ளடங்கும். வி பிடிஏ மற்றும் ரிசர்வ் போலீஸ் படையினர் இணைந்து இதனை தகர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் இறங்கினர்.

போராட்டத்தை அடக்க விவசாயிகள் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆயினும் விவசாயிகள் மத்தியில் அதிருப்தி ஓயவில்லை .

தங்கள் நிலத்தில் பயிரிடப்பட்டதை அழித்ததற்காக நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

சிவராம் கரந்த் லேஅவுட் மேம்பாட்டுக்காக விவசாயிகள் நிலத்தை கையகப்படுத்தியதற்கு உரிய தொகைகளை விரைந்து வழங்க வேண்டும். என்று அவர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.