விவசாயிகள் வேதனை

சிவகங்கை: , பிப்.21 காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு பட்ஜெட் டில் நிதி ஒதுக்கீடு இல்லாததால் 7 மாவட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்காக 65 ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த திட்டத்தில் காவிரி ஆற்றில் இருந்து தெற்கு வெள்ளாறு, வைகை, கிருதுமால் நதி, குண்டாறு வரை 262 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் அமைத்து, உபரி நீரை கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களுக்குக் கொண்டுசெல்ல முடிவு செய் யப்பட்டது.மேலும், இந்த திட்டத்தை 3 கட்டங்களாகச் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. முதல்கட்டத்தில் கரூர் மாவட்டம் காவிரி மாயனூர் கதவணையில் இருந்து புதுக் கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாறு வரை 118.5 கி.மீ. தொலைவுக்கும், 2-ம் கட்டமாக தெற்கு வெள்ளாற்றில் இருந்து வைகை ஆறு வரை 109 கி.மீ. தொலைவுக்கும், 3-ம் கட்டமாக வைகை ஆற்றில் இருந்து கிருதுமால் நதி வழியாக குண்டாறு வரை 34 கி.மீ. தொலைவுக்கும் கால்வாய் அமைக்கப்படும்.
இந்த திட்டத்தை 2021 ஜனவரி யில் அப்போதைய முதல்வர் பழனிசாமி
தொடங்கிவைத்தார். முதல்கட்டமாக காவிரி மாயனூர் கதவணையில் இருந்து தெற்கு வெள்ளாறு வரை கால்வாய் அமைக்க மொத்தம் ரூ.6,941 கோடி தேவைப்பட்ட நிலையில், ரூ.700 கோடி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து, 11 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் வெட்ட ரூ.331 கோடிக்கு ஒப்பந்தம் விடப்பட்டு, பணிகள் தொடங்கின.
அந்தப் பணி 3 ஆண்டு கள் கடந்தும் மந்தமாக நடந்து வரு கிறது. சில பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணியும் தொய் வடைந்துள்ளது. தொடர்ந்து நிதி ஒதுக்கீடும் இல்லாததால், அடுத்த கட்ட பணிகள் தொடங்கவில்லை.
இந்நிலையில், தமிழக பட்ஜெட் டில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு இல்லாததால் 7 மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்த னர்.