விவசாயியிடம் வழிப்பறி செய்த 2 பேர் கைது

பெங்களூர்: ஜூன். 7 – விவசாயி ஒருவரிடம் பணத்தை அபகரித்து நந்திமலைக்கு சென்று சொகுசாக இருந்த இரண்டு இளைஞர்களை தொட்டபள்ளாபுரா கிராமாந்தர போலீசார் கைது செய்துள்ளனர். நாகவராவில் உள்ள கோவிந்தபுரத்தை சேர்ந்த  சையத் சலீம் மற்றும் சையத் அபீப் ஆகியோர் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்  என கிராமாந்தர போலீஸ் எஸ் பி கோணவம்ஷி கிருஷ்ணா தெரிவித்துள்ளார். கோவிந்தபுராவின் ஏழு பேர் குற்றவாளிகள் கடந்த ஏப்ரல் 29 அன்று காலை நந்திமலைக்கு வந்திருந்தனர். செக் போஸ்ட் அருகில் டிக்கெட் வாங்க பணம் இல்லாமல் திரும்பிவரும் நிலையில் மேல்கோட்டையை சேர்ந்த விவசாயி ராஜன்னா என்பவர் தான் விளைவித்த காயை தொட்டபள்ளாபுரா ஏ பி எம் சி சந்தையில் விற்று விட்டு அதிலிருந்து கிடைத்த 15,500 ரூபாயை தன் ஜேபியில் வைத்து கொண்டு ஸ்கூட்டி வாகனத்தில் ஊருக்கு சென்றுகொண்டிருப்பதை பார்த்த இவர்கள் மேல்கோட்டை க்ராஸ் அருகில் வாகனத்தை தடுத்து நிறுத்தி காட்டி கோயிலுக்கு செல்லும் விலாசத்தை கேட்டுள்ளனர். ராஜன்னாவும் ஸ்கூட்டியை நிறுத்தி முகவரியை கூறியுள்ளார்.    கைது செய்யப்பட்ட இரண்டு குற்றவாளிகள் உடன் மேலும் ஒருவன் என மூன்று பேர் சேர்ந்து அப்போது ராஜண்ணாவிடம் கத்தியை காட்டி மிரட்டியதோடு அவருடைய வயிறு மற்றும் முதுகில் குத்தி பின்னர் ராஜன்னா ஜேபியில் கை போட்டு பணம் மற்றும் மொபைல் போனை அபகரித்துக்கொண்டு தப்பியோடிவிட்டனர். பின்னர் நந்தி மலைக்கு சென்று மது பானம்,  கோழி கறி என ஜோராக பார்ட்டி நடத்தி பணத்தை ஆடம்பரமாக செலவு செய்துள்ளனர்.