Home Front Page News விவசாயியை மிதித்து கொன்ற காட்டு யானை

விவசாயியை மிதித்து கொன்ற காட்டு யானை

பெங்களூரு, டிசம்பர் 16- மாவட்டத்தின் கனகபுரா தாலுகா உய்யம்பஹள்ளி ஹோபாலி ஹக்கனூர் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி பரிதாபமாக பலியானார்.
ஹக்கனூர் தொட்டியை சேர்ந்த கரியப்பா (75) என்ற விவசாயி நேற்று காலை கிராமத்தின் புறநகர் பகுதியில் உள்ள தனது வயலில் உள்ள தினை பயிருக்கு காவலுக்கு சென்றபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
அக்கம்பக்கத்தில் உள்ள விவசாயிகள் கொடுத்த தகவலின் பேரில், வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விவசாயியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சாத்தனூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடிக்கடி யானைகள் தாக்குவதால் இப்பகுதி விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகவும், யானைகளின் தாக்குதலுக்கு நிரந்தர தீர்வு காண விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version