விஷ்ணு வர்தன் நினைவிடம் 29ம் தேதி திறப்பு

பெங்களூரு, ஜன.12- மைசூரில் சாகச சிங்கம் டாக்டர் விஷ்ணுவர்தனின் நினைவிடம் வரும் 29ம் தேதி திறக்கப்படுகிறது
விஷ்ணுவர்தன் இறந்து கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப் பிறகு நினைவிடத்தைத் திறப்பதற்கு முதல்வர் பசவராஜ் பொம்மை தேதி நிர்ணயித்துள்ள இதுபற்றி தகவல் பகிர்ந்துள்ள நடிகரும், விஷ்ணுவர்தனின் மருமகனுமான அனிருத், முதல்வர் பசவராஜ பொம்மை வரும் 29ம் தேதி திறப்பு விழா நடத்த தேதி நிர்ணயம் செய்துள்ளார்.
சாஹச சிம்ஹா டாக்டர் விஷ்ணுவர்தனின் ஏராளமான ரசிகர்கள் விஷ்ணுவர்தனின் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துமாறு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு நினைவிடம் திறக்கப்பட உள்ளதால் விஷ்ணுவர்தனின் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
நினைவிட திறப்பு விழாவுக்காக காத்திருந்த ரசிகர்களின் ஆசை நிறைவேறும் நேரம் வந்துவிட்டது