விஷ காளான் சாப்பிட்ட தந்தை மகன் சாவு

closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

தக்ஷிண கன்னடா : நவம்பர். 22 – காட்டில் விளையும் விஷம் கலந்த காளானை உட்கொண்ட தந்தை மற்றும் மகன் என இருவர் இறந்துள்ள துயர் சம்பவம் பெல்தங்கடி தாலூகாவின் புதுவெட்டு என்ற இடத்தில் நடந்துள்ளது. புதுவெட்டு பகுதியின் மீயாறுபாத்தே கேரிமாறு என்ற கிராமத்தை சேர்ந்த குருவா (75) மற்றும் அவருடைய மகன் ஓடி (45) ஆகியோர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள். மிகவும் ஏழ்மையான குடுமபமான குருவாவுடன் இரண்டு மகன்கள் வசித்து வந்துள்ள நிலையில் இன்று காலை இவர்கள் இருவரின் இறந்த உடல்கள் வீட்டின் முற்பகுதியில் கிடந்ததை கண்டு உள்ளூர் வாசிகள் சந்தேகம் அடைந்து இவர்கள் குறித்து விசாரதித்தபோது நேற்று இரவு இவர்கள் இருவரும் காட்டில் ஏதோ விஷம் கலந்த காளானை சமையல் செய்து உண்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் இந்த துயரம் ஏற்பட்டுள்ளது . இவர்களின் மற்றொரு மகன் வீட்டில் இல்லாதிருந்ததால் இன்னொரு உயிர் தப்பியுள்ளது. தந்தை மகன் இருவரும் ஒரே நேரத்தில் இறந்துள்ள இந்த சம்பவம் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் , மற்றும் சுற்று பகுதி மக்கள் கூடி சேர்ந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு தர்மஸ்தலா போலீசார் வந்து மேற்பார்வையிட்டு உடல்களை கொண்டு சென்றிருப்பதுடன் பிரேத பரிசோதைக்கு பின்னரே உண்மைகள் தெரிய வரும் என தெரிகிறது.