வீடுகள் மீது காட்டு யானைகள் தாக்குதல்

ஹாசன் : மே. 30 – இந்த மாவட்டத்தில் காட்டு யானைகளின் தொல்லைகள் அளவுக்கு மீறி போயிருப்பதுடன் இது வரை வெறும் தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்த யானைகள் இப்போது நேரடியாக வீடுகளை தாக்க துவங்கியுள்ளன. பேலூர் தாலூகாவின் நெரலமக்கி கிராமத்தின் நேத்ரம்மா என்பவரின் வீட்டை நேற்று நள்ளிரவு காட்டு யானைகள் தாக்கியுள்ளன . சுமார் நான்கு மணி நேரத்துக்கும் அதிகமாக நேத்ரம்மா வீட்டை சுற்றி சுற்றி வந்துள்ள யானைகள் பின்னர் வீட்டை தாக்கியுள்ளன . இந்த சம்பவத்தில் வீட்டின் முற்பகுதி முழுதும் சேதமடைந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த ஒருவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. அனைவருமே காட்டு யானைகளின் தாக்குதலில் இருந்து தப்பியுள்ளனர்.