வீடு புகுந்து கொள்ளை- 5 பேர் கைது

பெங்களூர் : அக்டோபர் . 14 – ஐந்து பேர் கொண்ட வழிப்பறி கும்பல் ஒன்று சி கே அச்சுக்கட்டின் கார்வெபாவிபால்யா அருகில் ஒரு வீட்டுக்குள் நுழைந்து வீட்டில் இருந்த பெண்மணி உட்பட மூன்று பேரை மிரட்டி வழிப்பறி செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர் . கைது செய்யப்பட்ட மூன்று பேரும் போலீசாரின் ரௌடி பட்டியலில் இருப்பவர்கள் என்பதுடன் மேலும் இந்த சம்பவத்தில் தப்பியோடியுள்ள இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் . கடந்த அக்டோபர் 11 அன்று மாலை நான்கு மணியளவில் கார்வெபாவிபால்யா அருகில் உள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்து வீட்டில் இருந்த ஒருவரை பலவந்தமாக ஆட்டோவில் கடத்தி சென்று மூன்று குற்றவாளிகள் தங்களுக்கு ஐந்து லட்சம் ருபாய் ஏற்பாடு செய்யமாறு மிரட்டியுள்ளனர். இதில் இரண்டு குற்றவாளிகள் வீட்டிலேயே பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்துள்ளனர் . ஆட்டோவில் சென்ற ஒருவரை நீலகிரி தோப்புக்குள்ளும் பின்னர் கூடலு கேட் வரை அழைத்து சென்றுள்ளனர் . அவர் பணத்தை புரட்ட போன் செய்துகொண்டிருந்தபோது தன்னுடைய நண்பன் ஒருவன் அருகில் வந்துகொண்டிருப்பதை பார்தது உதவிக்கு கூவியுள்ளார் .பின்னர் நண்பன் ஆட்டோ அருகில் வருவதை கவனித்த குற்றவாளிகள் அங்கிருந்து தப்பியோடியிருப்பதுடன் வீட்டில் இருந்த தங்கள் கூட்டாளிக்கு போன் செய்து அவர்களையும் தப்பித்து ஓடுமாறு தெரிவித்துள்ளனர் . தங்க நகைகள் மற்றும் மொபைல் போன்களுடன் இந்த கும்பல் தப்பியோடியிருந்தது . அடுத்த நாள் பாதிக்கப்பட்ட மைக்கோ லே அவுட் வாசியான ஜி பி சதீஷ் போலீசில் இது குறித்து புகார் அளித்துள்ளார். குற்றவாளிகள் வீட்டுக்குள் நுழைந்தபோது நண்பன் ரவி என்பவருடன் உறவினர் வீட்டிற்கு தான் உணவுக்கு சென்றிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார் . குற்றவாளிகள் சதீஷை அழைத்துக்கொண்டு செல்லும் முன்னர் வீட்டில் இருந்த மூன்று பேரிடம் 1.95 லட்ச ரூபாய்களை அபகரித்தனர் . இதற்க்கு சதீஷ் எதிர்ப்பு தெரிவித்தபோது குழல் விளக்கால் அவரை தாக்கியுள்ளனர் . பின்னர் குற்றவாளிகள் அவரை பொம்மனஹள்ளி ரவுண்டானா , பின்னர் கூடலு கேட் வழியாக அழைத்து சென்று அங்கு பணத்திற்கு வழி செய்ய போன் செய்யுமாறு வற்புறுத்தியுள்ளனர் . போன் செய்ய ஆட்டோவிலிருந்து வெளியே வந்த போது தற்செயலாக தன்னுடைய நண்பன் வருவதை பார்த்து சதீஷ் உதவிக்கு கூவியுள்ளார் . ஐந்து குற்றவாளிகளில் மூன்று பேரை சி கே அச்சுக்கட்டு போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இவர்கள் மூவரும் போலீஸ் நிலையத்தில் ரௌடி பட்டியலில் இருப்பவர்கள் என்பதோடு இவர்கள் வழிப்பறி செய்து பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.