வீடு புகுந்து திருடும் 2 பேர் கைது


பெங்களூர், ஏப். 7- பூட்டிய வீட்டை உடைத்து திருடிய கும்பலை விஜயநகர் துணை மண்டல போலீசார் கைது செய்து
4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
அஞ்சனாத்திரி 21 இவரிடம் திருடப்பட்ட 4 லட்சத்து 85 ரூபாய் மதிப்பிலான 77 கிராம் தங்கம் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்துள்ளதாக டிஜிபி சஞ்சீவ் பாட்டில் தெரிவித்துள்ளார் ரோடு பகுதியில் பூட்டிய வீட்டை நோட்டம் போட்டு வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து ரூ.15, 000 ரொக்கப் பணம் 17 கிராம் தங்க நகைகளை கொள்ளையடித்து தலைமறைவாகினர்.
இதன் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த பிரசாந்த் பதுங்கியுள்ள தகவல் அறிந்து கைது செய்தனர். மாகடிரோடு பையட்ரஹள்ளி, கே.பி.அக்ரஹாரா, ஆகிய இடங்களில் வீடு புகுந்து தங்கநகைகள் திருடியுள்ளார். சுப்ரமணியா நகர், மகாலட்சுமி லே அவுட் பகுதியில் மோட்டார் பைக்குகள் திருடியதை ஒப்புக் கொண்டார்.
4 வீடுகளில் திருட்டு இரண்டு இரு சக்கரவாகனங்கள், திருடினதையும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.


விஜயநகரப் போலீசார் மொபைல் போன் திருடப்பட்ட நெலமங்களாவின் முகமது சோபியான் (20), என்பவரையும் கைது செய்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 5மொபைல் போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இவர் ஸ்கூட்டரை திருடி அதில் சுற்றித்திரிந்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மொபைல் போனை பறித்து தலைமறைவாகி வந்துள்ளார். விஜயநகரில் 5 வந்து மெயின் ரோட்டில் மனைவியுடன் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது மொபைல் போனை பறித்து ஓடும் போது, போலீசார் கைது செய்தனர் என்று டி.சி.பி. சஞ்சீவ் பாட்டீல் தெரிவித்தார்.