வீடு வெடித்து சிதறி5 பேர் பலி

வாஷிங்டன், ஆகஸ்ட் 15 அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் அலெகெனி பகுதியில் உள்ள ஒரு வீடு திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் மின்சாரம் மற்றும் கியாஸ் வினியோகம் உடனடியாக நிறுத்தப்பட்டது.எனினும் இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். மேலும் படுகாயம் அடைந்த 3 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.