வீட்டில் சமையல் எரிவாயுசிலிண்டர் வெடித்து 5 பேர் சாவு

உத்தரபிரதேசம் : மார்ச் 6 – வீடு ஒன்றில் சமையல் ஏறி வாயு சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் இறந்ததுடன் நான்கு பேர் படு காயமடைந்துள்ள சம்பவம் காக்கோரி பகுதியில் நடந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் முஷீர் (50) , ஹசன் பானு (45) , ரைவா (7) ஹுமா (4) மற்றும் ஹிவா (2) என தெரியவந்துள்ளது. மின் கசிவால் முஷீர் வீட்டிலிருந்த இரண்டு சிலிண்டர்களும் வெடித்துள்ளன. இந்த விபத்தில் மொத்தம் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். உடனே அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.அவர்களில் இரண்டு பேர் நிலைமை கவலைக்கிடமாயுள்ளது விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.இந்த தீ விபத்தில் வீடு முழுதும் சேதமடைந்துள்ளது. சிலிண்டர் வெடித்த உடனே வீடு முழுக்க தீ பற்றி கொண்டதால் யாரும் தப்பித்து வெளியே வர முடியவில்லை.இதனால் அதிக உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த முஷீர் பட்டாசு வியாபாரம் செய்து வந்தவர். தவிர வீட்டில் வைத்திருந்த வெடி மருந்துகளாலும் தீ விபத்துக்கான வாய்ப்புகள் உள்ளதாக போலீசார் கருதுகிறார்கள். இந்த நிலையில் தடவியல் l நிபுணர்கள் விபத்து நடந்த இடத்தை தீவிரமாக ஆய்ந்து வருகிறார்கள்.