வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிப்பு10 ஆயிரம் பணியாளர்கள்

பெங்களூரு, ஜன.15 – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் உடல்நிலையை கண்காணிக்க கிட்டத்தட்ட 10,000 மருத்துவ பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சுதாகர் தெரிவித்தார். மேலும் 10,000 ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.
10,000 மருத்துவர் மற்றும் ஆயுஷ் மாணவர்களுக்கான கோவிட் நோயாளிகளை வீட்டிலேயே தனிமைப்படுத்துவது குறித்த பயிற்சித் திட்டத்தில் அவர் ஸ்டெப் 1 உடன் இணைந்து பேசினார்.
அவர்களுக்கு 500 சிறப்பு மருத்துவர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் நிலையை அரசு கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்