மைசூர் : ஆகஸ்ட். 22 – கொலை விவகாரத்தில் தந்தை மற்றும் மகன் இருவரும் சிறைக்கு சென்றதால் மனம் நொந்த தாய் தற்கொலை செய்து ஒண்டுள்ள சம்பவம் இந்த மாவட்டத்தில் நடந்துள்ளது . குற்றவாளி தேஜஸ் தாய் இந்திராணி(35) தற்கொலை செய்துகொண்டவர். இந்த தகவல் அறிந்த இவருடைய கணவன் சிறையிலேயே மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். வித்யா நகரில் ஓர் சாதாரண காரணத்திற்க்காக பாலராஜு என்பவருடன் நண்பன் தேஜஸ் மற்றும் இவனுடைய தந்தை மற்றும் மேலும் இரண்டு பேர் சேர்ந்து சண்டை போட்டு கொண்டு கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளான தேஜஸ் மற்றும் அவனுடைய தந்தை சாம்ராட் , கிரண் , சஞ்சய் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறைக்கு அனுப்பினர் . தன்னுடைய கணவன் மற்றும் மகன் இது போன்ற குற்றத்தை செய்து சிறைக்கு சென்று விட்டனர் என தற்கொலைக்கு முயன்ற இந்திராணி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவருடைய சாவின் செய்தி அறிந்த இந்திராணியின் கணவன் சாம்ராட்டுக்கு சிறையிலேயே மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவங்கள் தொடர்பாக மண்டி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகி விசாரணை நடந்து வருகிறது.