
புதுடெல்லி, ஆக. 19 சொந்த வீடு என்பது அனைவரது கனவாக உள்ளது. இந்த ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் அரசு மற்றும் தனியார் வங்கிகள் போட்டிபோட்டுக்கொண்டு வருமானத்தை பொறுத்து லட்சக்கணக்கில் வீடு மற்றும் தனிநபர், வர்த்தக கடன்களை வழங்கி வருகிறது. கடனுக்கான விதிமுறைகள் தெரியாமலேயே பலர் கண்ணை மூடிக்கொண்டு வீட்டுக்கடன்களை வாங்கி வருகின்றனர்.
கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 5 முறை அதிகரித்தது.
மொத்தம் 25 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் வீட்டுக்கடன் மற்றும் தனிநபர் கடன் வாங்கியவர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
பெரும்பாலான வட்டி விகிதம் உயரும் போது வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு தகவல் எதுவும் தெரிவிக்காமல் மாத தவணையை உயர்த்தியும், கடன் கால அளவை நீட்டித்தும் வருகிறது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி புதிய விதிமுறையை அறிவித்து உள்ளது.
தற்போது கடன்களுக்கான விதிமுறைகளை வாடிக்கையாளர்கள் முறையாக பின்பற்றாவிட்டால் அந்த கடன் தொகை மீது அபராத வட்டி விதித்து அதை வட்டியோடு சேர்த்து விடுகிறது.