வீட்டுக்கு மின்சாரம் திருடியதாக குமாரசாமி மீது எப்.ஐ.ஆர்

பெங்களூர் : நவம்பர். 15 –
தனது வீட்டுக்கு சட்ட விரோதமாக மின்சார இணைப்பு எடுத்ததாக முன்னாள் முதல்வர் குமாரசாமி மீது ஜெயநகர் விஜிலன்ஸ் போலீஸ் நிலையத்தில் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெஸ்கம் அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது
தனது வீட்டுக்கு மின்சாரம் திருடியதாக முன்னாள் முதல்வர் குமாரசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது கர்நாடக அரசியலில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது தீபாவளி பண்டிகை முன்னிட்டு குமாரசாமியின் வீடு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது இதற்காக அழுகை இருந்த மின்சார கம்பத்தில் இருந்து சட்ட விரோதமாக மின் இணைப்பு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னாள் முதல்வர் ஹெச் டி குமாரசாமி வீட்டிற்கு தீபாவளி ப்ண்டிகையின்போது அவர் வீட்டு அருகில் இருந்த மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் எடுக்கப்பட்டுள்ளது. , ஆனால் இந்த விஷயம் தனக்கு தெரியாது என்றும் தனக்கு தெரியாமலேயே மின் கம்பத்திலிருந்து மின்சார தொடர்பு கொடுத்துள்ளதாக குமாரசுவாமி தெரிவித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த உடனேயே மின் தொடர்பை அறுத்து உள்ளதாகவும் குமாரசாமி தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து பெங்களூர் மின் விநியோக நிறுவனம் கடந்த செவ்வாய்க்கிழமை குமாராசாமிக்கு எதிராக வழக்கு பதிவு செய்திருந்தது . இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் குமாரசாமி தன்னுடைய ஜெ பி நகரில் உள்ள வீட்டுக்கு ஒளி அமைப்பு அமைக்க அருகில் உள்ள விளக்குக்கம்பத்தில் இருந்து மின்சாரத்தை திருடியதாக குற்றம் சாட்டியிருந்தனர்.இந்த நிலையில் மின்சாரத்துறை மின்சார திருட்டு பிரிவு சட்டம் 135ன் கீழ் குமாரசாமிக்கு எதிராக வழக்கு பதிவுசெய்துள்ளது. இதற்கு முன்னர் காங்கிரஸ் பிரமுகர்கள் குமாரசாமியின் சட்ட விரோத நடவடிக்கை குறித்து தங்கள் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளனர். ஆனாலும் இதற்கு பதிலளித்துள்ள குமாரசாமி தனக்கு தெரியாமல் இந்த சம்பவம் நடந்திருப்பதாகவும் உடனடியாக இந்த மின் தொடர்பை தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.