வீட்டுமனை மோசடி 4 பேர் கைது

பெங்களூர் : ஜூன். 4 – திரைப்படத்தில் முதலீடு செய்து கையை சுட்டுக்கொண்டு மோசடி விவகாரங்களில் ஈடுபட்ட சினிமா தயாரிப்பாளர் உட்பட நான்கு பேரை ராஜாஜிநகர் போலீசார் கைது செய்துள்ளனர். ரியல் எஸ்டேட் பெயரில் மோசடிகள் நடத்திய சினிமா தயாரிப்பாளர் மஞ்சுநாத் , சிவகுமார் , கோபால் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள். குற்றவாளி மஞ்சுநாத் நகைச்சுவை நடிகர் கோமல் குமார் நடித்த ‘லொட்டே ‘ என்ற கன்னட சினிமாவை தயாரித்து இந்த சினிமாவில் கோடிக்கணக்கில் முதலீடு செய்து பின்னர் அந்த திரைப்படம் திரைக்கு வந்தும் வெற்றியடையாத நிலையில் பல லட்சங்கள் நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தயாரிப்பாளர் மஞ்சுநாத் ராஜாஜிநகரில் வீடு மற்றும் மனைகளை விற்பனை செய்யும் ரியல் எஸ்டேட் நிறுவனம் துவங்கினார். ஈகிள் ட்ரீ பில்டர்ஸ் மற்றும் டெவெலப்பர்ஸ் டாட்ஸ் ஆகிய பெயர்களில் அலுவலகம் திறந்து மனைகளை விற்பதாக விளம்பரங்கள் கொடுத்திருந்தார். இந்த நிலையில் புஷ்பகுமார் என்பவர் இந்த விளம்பரங்களை பார்த்து சினிமா தயாரிப்பாளர் மஞ்சுநாத்தை சந்தித்து பேசியதில் குறைந்த விலைக்கு மனை கொடுப்பதாக, தெரிவிதது தவணை முறையில் அடிக்கடி இரண்டு லட்ச ரூபாய்களை மஞ்சுநாத் வாங்கியுள்ளார். அது மட்டுமின்றி யாருடைய நிலத்தையோ காட்டி அந்த மனையை கொடுப்பதாக நம்பவைத்து ள்ளார் . அந்த நிலத்துக்கான ஆவணங்களை கேட்ட போது திரைப்பட தயாரிப்பாளர் மஞ்சுநாத்தின் உண்மைவேஷம் தெரிய வந்துள்ளது. இது குறித்து புஷ்பகுமார் ராஜாஜிநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருப்பதுடன் இந்த புகாரை பதிவு செய்து கொண்ட போலீசார் சினிமா தயாரிப்பாளர் மஞ்சுநாத் , சிவகுமார் , கோபால் மற்றும் சந்திரசேகர் ஆகியோரை கைது செய்துள்ளனர்.