வீட்டு சுவர் இடிந்து ஒருவர் பலி

சிக்கமகளூர் : நவம்பர். 7 – நேற்று மாநிலத்தின் பல பகுதிகளிலும் பெய்த கனத்த மழையால் வீட்டின் சுவர் இடிந்து
விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் கடூர் தாலூகாவின் மச்சேரி கோடிஹள்ளி என்ற கிராமத்தில் நடந்துள்ளது . கோடிஹள்ளி கிராமத்தை சேர்ந்த லச்ச நாயகா (80) என்பவர் இந்த விபத்தில் உயிரிழந்தவர்.
ஏற்கெனவே சிதிலமடைந்திருந்த வீட்டு சுவர் நேற்று பெய்த மழையில் இடிந்து விழுந்துள்ளது.
இந்த இடிபாடுகளின் அடியில் சிக்கி படுகாயங்களடைந்த லச்ச நாயகா அதே இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கடூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.