வீட்டு பூட்டை உடைத்து ஒரு கிலோ தங்கம் திருட்டு

மண்டியா : ஜனவரி. 24 – வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் ஒரு கிலோ தங்கத்தை திருடி சென்றுள்ள சம்பவம் மததூர் தாலூகாவின் சோமனஹள்ளியில் நேற்று மாலை நடந்துள்ளது. சோமனஹள்ளியை சேர்ந்த லோலாக்ஷி என்பவர் நேற்று மாலை தன் நண்பரின் வீட்டுக்கு சென்றிருந்த போது திருடர்கள் இவர் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் நுழைந்து அலமாரியில் இருந்த தங்க நகைகளை அபகரித்து கொண்டு தப்பியோடியுள்ளனர். லோலாக்ஷிஎன்பவர் நேற்று மாலை தன் நண்பரின் வீட்டிலிருந்து திரும்பி வந்த போது இந்த விவகாரம் தெரிய வந்துள்ளது.
பின்னர் இது குறித்து லோலாக்ஷி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு போலீசார்மோப்ப நாய்களுடன் வந்து சோதனைகள் மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.