வீட்டு மனை வழங்குவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி

பெங்களூர் : டிசம்பர். 7 – வீட்டு மனை கொடுப்பதாக நம்பவைத்து தவணை முறையில் 30 லட்சம் ரூபாய்கள் பெற்றுக்கொண்டு மோசடி செய்திருக்கும் விஷயத்தில் தனக்கு நீதி வழங்க வேண்டும் என அமெரிக்காவில் வாழும் இந்திய பிரஜை ஒருவர் நகர போலிஸ் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். ராகவேந்திரா பிரசாத் என்பவர் கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்காவில் ஒரு நிறுவனத்தில் தகவல் தொழில் நுட்ப ஊழியராக பணியாற்றிவருகிறார். நிலம் கொடுப்பதாக ரியல் எஸ்டேட் தொழில் நடத்தும் ஜெ சி நகரில் உள்ள தனியார் நிறுவன உரிமையாளரான அரவிந்த் மற்றும் ஹரிகிரிஷ்ணா இருவரும் சேர்ந்து தனக்கு 30 லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளதாக போலீஸ் ஆணையருக்கு ட்வீட் வாயிலாக புகார் அளித்துள்ளார். இதை சம்பவம் குறித்து அமெரிக்காவிலிருந்து ராகவேந்திரா பிரசாத் போலிஸாருக்கு புகார் அளித்துள்ளார். ஜெ சி நகரில் உள்ள வற்சயூ இனப்பிரா பில்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் வாயிலாக தனக்கு மோசடி நடந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2022ல் ராகவேந்திரா கெங்கேரியில் ராயல் ரிசார்ட் பகுதியில் மனை வாங்கியுள்ளார். நிறுவனம் இவரிடமிருந்து தவணை முறையில் 30 லட்சம் பணம் பெற்றும் நிலத்தை பதிவு செய்யாமல் பல மாதங்களுக்கு அழிய விட்டுள்ளது. கடைசியில் தனக்கு நிலம் வேண்டாம் ஏன் பணத்தை திருப்பி கொடுங்கள் என ராகவேந்திரா கடிதம் வாயிலாக நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். ஆனால் நிறுவனம் இன்று நாளை என பல மாதங்களாக எந்த பணத்தையும் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளது. ஒரு புறம் நிலமும் கிடைக்கவில்லை அதே வேளையில் மறுபுறம் தன பணமும் கிடைக்கவில்லை என ராகவேந்திரா அல்லல் பட்டு வருகிறார். இதற்க்கு முன்னர் ராகவேந்திராவின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளிக்க சென்ற போது போலீசார் எவ்வித அக்கறையும் காட்டவில்லை. எனவே தனக்கு நீதி வழங்க வேண்டும் என தற்போது நகர போலீஸ் ஆணையரிடம் ராகவேந்திரா கோரியுள்ளார். இந்த நிறுவனம் இதே போல் பலரையும் மோசடி செய்துள்ளதாக தகவல்கள் உள்ளன. இதற்கு முன்னரும் ஜெ பி நகர் போலீஸ் நிலையத்தில் இந்த நிறுவன உரிமையாளர் அர்விந்த் மற்றும் ஹரிகிரிஷ்ணா ஆகியோருக்கு எதிராக புகார்கள் பதிவாகியுள்ளது.