வீட்டு மருந்துகள் எது இருந்தாலும் அவற்றை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்வதே நல்லது.


எவ்வித உடல் கோளாறு இருந்தாலும் வயிறு முழக்க உணவு உட்கொண்டபின் மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பது நியதி. ஆனால் சில வீட்டு மருந்துகளை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்வதே உத்தமம். காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் நகம் தாங்கும் அளவிற்கான சூடு நீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறை கலந்து குடித்தால் வயிற்று தொப்பை குறையும்.
திப்பிலி , ஜாதிக்காய் , இஞ்சி மற்றும் மிளகை தேய்த்து குழந்தைகளுக்கு ஒரு ஸ்பூன் அளவிற்கு காலையில் ஊட்டினாள் அவர்களுக்கு வயிற்றில் உயிர் புழுக்கள் தோன்றாது
பசித்த வயிற்றில் மூன்று லோட்டா தண்ணீர் குடித்து நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு பின்னர் உணவு உட்கொள்ளவேண்டும்
நல்ல சீரான ஜீரண கிரியைக்கும், சருமத்தின் அழகை கூட்டவும், தொப்பை குறைக்கவும் கரு கரு நீண்ட ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கும் இது உதவும். பசித்த வயிற்றில் தண்ணீர் குடிப்பது சிறுநீரகத்தில் கல் மற்றும் சிறுநீரக கோளாறுகளுக்கு நல்லது. பசித்த வயிற்றில் நீர் குடிப்பது வயிறு மற்றும் மார்பு எரிச்சலையும் தவிர்க்கும். தவிர உடலில் உள்ள நச்சுகளையும் வெளியேற்றும்.
பல் துலக்கிய பின்னர் பசித்த வயிற்றிலேயே பதினைந்து கறிவேப்பிலை இலைகள் மற்றும் அரை ஸ்பூன் சீரகத்தை உட்கொள்ளும் வழக்கம் ஏற்படுத்திக்கொண்டால் அநேக பலன்கள் உள்ளது. கூந்தல் உதிர்வது குறையும். கண்பார்வை கோளாறுகளும் நீங்கும். வெறும் வயிற்றில் கறிவேப்பிலை உட்கொள்வது வாயு மற்றும் அசிடிட்டி க்கு நல்ல மருந்து. எலும்பு மூட்டு வலிகள் குறையும் என்பதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும். கறிவேப்பிலை உட்கொள்வது சர்க்கரை வியாதியையும் கட்டுப்படுத்தும். உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்கிறது. கறிவேப்பிலையை அரைத்து அதிகாலையில் குடித்தால் பெரியவர்களுக்கு வயிற்றி ல் உயிர் புழுக்கள் தோன்றாது. வாயு சம்மந்த பிரச்சனைகளையும் கறிவேப்பிலை நீக்கும்.
பசித்த வயிற்றில் வெள்ளைப்பூண்டை உட்கொண்டால் ரத்த அழுத்தம் சீராகும். வயிற்றில் பாக்டீரியாக்கள் உருவாவதை தவிர்ப்பதோடு வெள்ளைப்பூண்டு ஜீரண சக்தியையும் அதிகரிக்கச்செய்யம்.