வீரப்பன் கூட்டாளி தூக்குதண்டனையை மாற்ற மத்திய அரசு மறுப்பு

புதுடெல்லி : அக்டோபர் . 26 – வன கள்ளன் மற்றும் போலீசாரின் கொலையாளி வீரப்பனின் வலது கை என கருதப்பட்ட 22 போலீசாரை கொலை செய்த புகாரில் சம்மந்தப்பட்ட ஞானப்ரகாஷ் என்பவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ஆயுளை கைதாக மாற்ற கூடாது என மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு 2023ம் ஆண்டிலேயே முடிவு செய்துள்ள நிலையில் அதன் தீர்ப்பை தற்போது மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. கடந்த 1993ல் கர்நாடகாவில் நில வெடிகுண்டுகள் வைத்து 22 போலீசாரை கொலை செய்த விவகாரத்தில் ஞானப்ரகாஷிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் ஞானப்ரகாஷ் இதுவரை 30 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துள்ளான் . இதனால் இவனுக்கு அளிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ஆயுள் கைதியாக மாற்றி இவனை விடுவிக்கவேண்டும் என ஞானப்ரகாஷின் மனைவி செல்வா மேரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனால் உயிர் காலம் வரை சிறை தண்டனைக்கு அனுமதி இல்லை என என மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இருதய கோளாறால் பாதிப்புக்குள்ளாகியுள்ள ஞானப்ரகாஷ் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியிருந்தது. தற்போது இந்த ஜாமீன் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்க பட்டுள்ளது. இதே வேளையில் மத்திய அரசு இவருக்கு ஆயுள் தண்டனையை அளிக்க மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்றம் செல்வி மேரியிடம் தெரிவித்திருந்தது. வீரப்பனின் கூட்டாளிகளின் உயிரோடு இருக்கும் ஒரே நபர் ஞானப்ரகாஷ் , தவிர வீரப்பனின் கூட்டாளிகளான சைமன் , மற்றும் மீசை மாதய்யா ஆகியோர் ஏற்கெனவே சிறையில் இறந்துள்ளனர். வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் இவர்கள் இறந்துள்ளனர். ஞானப்ரகாஷ் 22 பொலிஸாரின் கொலைக்கு காரணமானவன் என்பதால் இது தீவிரமான குற்றம் என்ற நிலையில் நாட்டின் உள்ளமைப்பு பாதுகாப்பிற்கும் இந்த சம்பவம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக எதிரான மரண தண்டனையை ஆயுள் கைதியாக மற்ற இயலாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது.