வெங்கடரமண சுவாமி கோவில் கும்பாபிஷேகம்


தங்கவயல், பிப். 23- பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவிலில் நேற்று அஷ்ட பந்தன மகா சம்ப்ரக்ஷண கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
ராபர்ட்சன் பேட்டையில் நூற்றாண்டு பழமையான
பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவிலில் இம்மாதம் 19 ல் கொடியேற்றலுடன் அஷ்ட பந்தன மகா சம்ப்ரக்ஷண கும்பாபிஷேக விழா துவங்கியது.
தினமும் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடந்தது. கர்நாடக ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட இக்கோவிலை புதுப்பிக்க 7 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அரசு வழங்கி இருந்தது. தமிழகத்தை சேர்ந்தவர்கள் கோபுர சிற்பங்களுக்கு வண்ணம் பூசினார். கொடி கம்பம் பித்தளை மால் உருவாக்கினர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலை மலர்களால் அலங்கரித்திருந்தனர். 11 குண்டங்கள் அமைத்து யாக பூஜைகள் செய்தனர். 108 கலசங்களை ஏற்படுத்தினர்.
30 கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் நான்கு நாட்களாக மந்திரங்கள் ஓதினர். சிறப்பு பூஜைகள் நடத்தினர்.
நேற்று மதியம் 12:30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தினர் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து பக்தி பரவசத்தோடு கோவிந்தா … கோஷங்களை விண்ணதிர எழுப்பினர்.