வெங்காயம் நேரடி கொள்முதல்

புதுடெல்லி மார்ச் 8
இந்தியாவில் வெங்காயம் விலை வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி அடைந்து உள்ளது இதனால் வெங்காயம் பயிரிட்டு உள்ள விவசாயிகள் பெரும் கவலை அடைந்து உள்ளனர்
வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடைந்து வருவதால், விவசாயிகளிடமிருந்து நேரடியாக வெங்காயத்தை கொள்முதல் செய்ய ஏஜென்சிகளுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது
சிவப்பு வெங்காயத்தை வாங்குவதற்கும், நுகர்வு மையங்களுக்கு ஒரே நேரத்தில் அனுப்புவதற்கும் விற்பனை செய்வதற்கும் சந்தையில் உடனடியாக தலையிடுமாறு அதன் கொள்முதல் நிறுவனங்களுக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. மண்டிகளில் விலை வீழ்ச்சியின் சவால்களை எதிர்கொள்ள, மலிந்த பருவங்களில் விநியோக சங்கிலியை சீராக வைத்திருக்க, வெங்காயத்தை கொள்முதல் செய்வதற்கும் சேமிப்பதற்கும் விலை நிலைப்படுத்தும் நிதியை அரசாங்கம் ஒதுக்கி வைத்துள்ளது இந்த நிலையில் மத்திய
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 10 நாட்களில் சுமார் 4,000 டன் வெங்காயத்தை நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்துள்ளது.
முக்கிய காய்கறி கிலோ ஒன்றுக்கு 1-2 ரூபாய் வரை குறைந்ததாக செய்திகள் வந்தன இந்தியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தையான லாசல்கான் மண்டியின் விலை கிடுகிடு என குறைந்துள்ளது .அமைச்சகத்தின் அறிக்கையின்படி, 40 கொள்முதல் மையங்களைத் திறந்துள்ளது, அங்கு விவசாயிகள் தங்கள் இருப்புகளை விற்று ஆன்லைனில் பணம் பெறலாம். கொள்முதல் மையங்களில் இருந்து டெல்லி, கொல்கத்தா, கவுகாத்தி, புவனேஸ்வர், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் மற்றும் கொச்சி ஆகிய இடங்களுக்கு பங்குகளை நகர்த்துவதற்கான ஏற்பாடுகளை செய்யப்பட்டு உள்ளது மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் விலை வீழ்ச்சி அடைந்து கவலையில் உள்ள விவசாயிகள் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள் என தெரிகிறது