வெங்காயம் விலை சரிவுக்கு காரணம் என்ன

பெங்களூர், பிப். 1-
வெங்காயம் விலை வீழ்ச்க்கு ஏற்றுமதி தடையே காரணம் என்று தெரியவந்துள்ளது.
இந்திய அரசு டிசம்பர் 2023 முதல் மார்ச் 2024 வரையில் வெங்காய ஏற்றுமதி தடையை அமல்படுத்தியது.வெங்காய ஏற்றுமதி தடை விதிக்கப் பட்டுள்ளதால் மாநில விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக வெங்காயத்தின் மொத்த விற்பனை விலையில் குறிப்பிடத்தக்களவு குறைந்துள்ளது.
பெங்களூர் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காய வியாபாரிகள் சங்க செயலாளர் ரவி சங்கர். பி விலை சரிவுக்கு முக்கிய காரணம் ஏற்றுமதி தடையே என்று அவர் குறிப்பிட்டார்.
ஏற்றுமதி தடையை நீக்கிட வேண்டும்.
ஏற்றுமதி தொடங்கினால் கிலோவுக்கு ஐந்து முதல் பத்து ரூபாய் வரை விலை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.பங்களாதேஷ், இலங்கை மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு பாரம்பரியமாக கர்நாடக மாநிலத்தில் இருந்து கணிசமான அளவுக்கு வெங்காயத்தை இறக்குமதி செய்து வரப்பட்டது என்றார்.
கடந்தாண்டு போல நிறைய பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வெங்காய சாகுபடி விவசாயிகள் செய்தனர் என, சித்ரதுர்கா செல்லக்கரை விவசாயி மகந்தேஷ் தெரிவித்தார்.
உள்ளூர் விவசாயிகள், அக்டோபர், நவம்பர் வரை அதிகமாக வெங்காயத்தை விதைத்தனர். கடந்தாண்டு அவர்களுக்கு கிடைத்த குவிண்டாலுக்கு 3000 ரூபாய் போல இப்போதும் கிடைக்கும் என அவர்கள் நம்பி இருந்தனர்.ஆனால் அதன் பயன் கிடைக்கவில்லை.
மகாராஷ்டிராவில் இருந்து வெங்காயம், வெள்ளம் ,வருவதற்கு தடையை அனுமதித்தது. மேலும் உள்ளூர் உற்பத்திக்கான தேவையை மேலும் குறைத்தது.
பெங்களூர் யஷ்வந்த்பூர் ஏ பி எம் சி யார்டில் தற்போது கிலோவுக்கு ஐந்து முதல் 20 வரையில் அளவு மற்றும் தரத்தை பொறுத்து உள்ளது.

தர வெங்காயம் பத்து ரூபாய் முதல் 15 ரூபாய் வரையிலும், சிறிய அளவில் கோல்டா வெங்காயம் ஒரு கிலோ 5 முதல் 10 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த மாதம் வெவ்வேறு அளவு, தரம் ஒரு கிலோ 25 முதல் 44 ரூபாய் வரையில் விற்கப்பட்டது.

நகரில் சில்லறை வியாபாரமாக ரிச்மென்ட் டவுன் சூப்பர் மார்க்கெட்டில் ஒரு கிலோ வெங்காயம் 24 ரூபாய்க்கும், எச்ஏஎல் ரெண்டாவது ஸ்டேஜ் பகுதியில் 35 ரூபாய்க்கும், சாந்தாலா நகரில் சிறிய மளிகை கடையில் 40 ரூபாய்க்கும் விற்கப்பட்டனஇதற்கு ஏ.பி.எம்.சி யில் இருந்து கொண்டு வரும் வெங்காயத்துக்குஎரிபொருள், போக்கு வரத்து செலவு, கணக்கிட்டு அதனை விற்கப்படுகிறது என ஒரு வியாபாரி தெரிவித்துள்ளார்.