வெங்காயம் விலை தொடர்ந்து உயர்வு

பெங்களூர், ஆக 31- தக்காளி விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. தற்போது அதன் விலை குறைய தொடங்கியுள்ளது.
அதேபோல வெங்காயத்தின் விலையும் மீண்டும் பொது மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியு ள்ளது.
வெங்காயம் அன்றாடம் பயன்படுத்தும் உணவின் மூலப் பொருளாக அமைந்துள்ளது. சைவம் மற்றும் அசைவம் இரு வகை உணவுகளிலும் வெங்காயத்தை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.
அண்மைக் காலமாக 100 ரூபாய்க்கு 5 கிலோ வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது. அது தற்போது 100 ரூபாய்க்கு மூன்று கிலோவாக குறைத்து விட்டனர்.
தரமான வெங்காயம் ஒரு கிலோ 42 முதல் 45 ரூபாய் வரை விற்கப்படுகிறது. தரம் குறைந்த வெங்காயம் 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சித்ரதுர்கா தாவணக்கெரே, செல்லக்கரே, உட்பட வட கர்நாடகா பகுதிகளில் வெங்காய விளைச்சல் செய்வது வழக்கம்.
இப்பகுதிகளில் பருவ மழை பெய்யத் தவறியதால், உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெங்காயத்தை பல நாட்கள் சேமித்து வைக்கலாம். இதனால் விபரம் அறிந்த பல குடும்பங்கள், மொத்த சந்தையில் அதிக அளவு கொள்முதல் செய்யவும் பலர் திட்டமிட்டுள்ளனர்.