வெங்காய பக்கோடா


தேவையான பொருட்கள்:
வெங்காயம் – இரண்டு
கடலை மாவு – அரை கப்
கார பொடி – இரண்டு ஸ்பூன்
அரிசி மாவு – இரண்டு ஸ்பூன்
கொத்துமல்லி மற்றும் இஞ்சி – சிறிதளவு
உப்பு – ருசிக்கேற்ப
தண்ணீர் – அரை கப்
எண்ணெய் – வறுக்க போதுமான அளவு
செய்யும் முறை: வெங்காயத்தை எடுத்து அதன் மேல் மற்றும் கீழ் பகுதிகளை வெட்டி விடவும். வெங்காயத்தை அரை பாகமாக செய்து கொண்டு அறுக்கவும். மெலிதாகவும் மற்றும் நீளமாகவும் அறுத்து கொள்ளவும். கலக்கும் பாத்திரத்தில் போடவும். வெங்காயத்தை தனி தனியாக பிரித்து கொள்ளவும் கடலை மாவை அதே பாத்திரத்தில் போடவும். இத்துடன் அரிசி மாவு மற்றும் கார பொடியை சேர்க்கவும். பின்னர் நறுக்கிய கொத்துமல்லி உப்பு மற்றும் இஞ்சியை சேர்க்கவும். இவற்றை நன்றாக கலந்து கொள்ளவும். சிறிது சிறிதாக நீரை ஊற்றி பிசைந்து கொள்ளவும். இந்த மாவு சற்று கெட்டியாக இருக்கும் அளவில் பிசையவும். ஒரு சிறிய பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் எண்ணையை ஊற்றவும். இரண்டு நிமிடங்கள் எண்ணையை சூடாக்கவும். பின்னர் அதை பிசைந்து வைத்துள்ள மாவுடன் சேர்த்து கலக்கவும். சுடுவதற்கு ஒரு வாணலியில் எண்ணைய் ஊற்றவும் மிதமான தீயில் எண்ணையை சூடாக்கவும். எண்ணெய் சூடாகியுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள ஒரு சிறிய வெங்காய துண்டை அதில் போடவும். வெங்காயம் நுரையுடன் மேலே வந்தால் எண்ணெய் சுடுவதற்கு தயாராக உள்ளது என அர்த்தம். ஒரு கரண்டியின் உதவியால் மாவை கொஞ்சம் கொஞ்சமாக ஒன்றன் மீது ஒன்றாக போடவும். அவரவர் கைகளாலும் மாவை எண்ணெயில் போடலாம். இந்த மாவை மிதமான சூட்டில் இரண்டு நிமிடங்கள் வரை வேக விடவும். மாவு அனைத்து பகுதிகளிலும் வேகும் வகையில் கரண்டியால் திருப்பி விடவும். இது தங்க நிறம் வரும் வரையில் வறுத்து பின் எடுத்தால் .. அப்பப்பா , நாமும் ஒரு நல்ல சுவையான வெங்காய பக்கோடா செய்ய தெரிந்தவர்கள் தான் என்ற பெருமை உங்களை சேரும்.