வெங்காய விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ.300 நிவாரணம்

மும்பை, மார்ச் 14. மராட்டியத்தில் விளைச்சல் அதிகம் காரணமாக வெங்காயத்தின் விலை சரிந்து உள்ளது. சமீபத்தில் சோலாப்பூரில் விவசாயி ஒருவரின் 500 கிலோ வெங்காயம் மார்க்கெட்டில் கிலோவுக்கு 1 ரூபாய் மட்டுமே ஏலம் போனது.
கழிவுகள் போக அந்த விவசாயிக்கு ரூ.2 மட்டுமே கிடைத்து இருந்தது.
விலை வீழ்ச்சி காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்தநிலையில் விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட வெங்காய விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ.300 நிவாரணம் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்து உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை நடந்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், “வெங்காய உற்பத்தி அதிகரித்ததால் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. வெங்காயம் மாநிலத்தின் முக்கிய பயிர். இந்த விவகாரத்தை மாநில அரசை கவனமாக கையாளும்” என்றார்.