வெடிகுண்டு குற்றவாளிவிரைவில் கைது : அமைச்சர்பரமேஸ்வர் நம்பிக்கை

பெங்களூர் : மார்ச். 7 – நகரின் வொயிட் பீல்டில் உள்ள ராமேஸ்வரம் ஓட்டலில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த வெடிகுண்டு விவகாரத்தில் போலீசாருக்கு தகுந்த தடயங்கள் சிக்கியுள்ள நிலையில் விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவான் என மாநில உள்துறை அமைச்சர் முனைவர் ஜி பரமேஷ்வ்ர் நம்பிக்கை அளித்துள்ளார். வெடிகுண்டு விவகாரம் தொடர்பாக சி சி பி போலீசார்விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். தவிர தனிப்பட்ட முறையில் தேசிய புலனாய்வு குழுமமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த பாதக செயலை செய்த குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவான் என அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் வெடிகுண்டு உட்பட சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து விசாரணை மேற்கொண்ட மாநில புலனாய்வு துறை மத்திய தேசிய புலனாய்வு துறை மற்றும் தகவல் மையங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. எத்தனையோ முறை மத்திய விசாரணை குழுக்கள் நம்மிடம் தகவல்கள் சேகரித்துள்ளன. அதன்படி விசாரணை குழுக்களுக்கு கிடைத்துள்ள ஆதாரங்களை வைத்து விசாரணை நடந்து வருகிறது. வெடிகுண்டு இருப்பதாக தகவல் அனுப்பிய விவகாரம் குறித்தும் தீவிரமாக கருதியுள்ளோம் . இ மெயில் அனுப்பிய விவகாரம் தொடர்பாக ப்ரோடான் நிறுவனத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது . தகவல் அனுப்பிய அடையாளம் தெரியாதவன் குறித்து தகவல் தருமாறு கோரப்பட்டுள்ளது. இதுவரை andha நிறுவனத்திடமிருந்து பதில் வரவில்லை. இந்த நிலையில் ப்ரோட்டான் நிறுவனத்தை தடை செய்வது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் நகரின் 35க்கும் மேற்பட்ட பள்ளிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக விஷமிகள் தகவல்கள் அனுப்பியிருந்தனர். இவை அனைத்து குறித்தும் அரசு மிக தீவிரமாக கருதுகிறது இவ்வாறு மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் நிருபர்களிடம் தெரிவித்தார்.