வெடித்தது குண்டு தான் – முதல்வர் தகவல்

பெங்களூர் மார்ச் 1- பெங்களூரில் இன்று பிரபல ராமேஸ்வரம் என்ற ஓட்டலில் வெடித்தது வெடிகுண்டு தான் என்று முதல்வர் சித்தராமையா உறுதிப்படுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும் போது முதல் கட்ட விசாரணையில் வெடித்தது ஐஇடி குண்டு தான் என தெரிய வந்துள்ளது. என்றாலும் முழுமையான விசாரணை முடிந்த பிறகு உறுதியான தகவலை தெரிவிக்க முடியும் என்று முதல்வர் கூறியுள்ளார்.

இதற்கிடையே இந்த குண்டை வைத்தது யார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் ஹோட்டலில் அருகே உள்ளே இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர் இந்த ஓட்டலுக்கு காலை முதல் யார் யார் வந்தனர் யார் யார் வெளியே சென்றனர் என்பது குறித்து காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

குண்டுவெடிப்பு பின்னணியில் இருப்பது தனிப்பட்ட விவகாரமா பழிவாங்கும் நோக்கமா? அல்லது தீவிரவாத நடவடிக்கை என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.