வெடிப்பு பாதங்களுக்கு வீட்டு மருந்து

வேப்பிலை இலைகளை பேஸ்ட் செய்து அதில் சற்று மஞ்சளை கலந்து பாதங்களின் பின் பகுதியில் தடவி அரை மணி நேரம் விட்டு சூடு நீரில் பின்னர் காலை கழுவி துடைத்தால் வெடிப்புகள் நாளுக்கு நாள் மூடிக்கொள்ளும். நன்றாக பழுத்த வாழைப்பழம் மற்றும் வெண்ணெய் பழத்தை பேஸ்ட் செய்து பின் பாதங்களில் தடிமனாக தடவி 15 முதல் 20 நிமிடங்கள் விட்டு கால்களை கழுவினாலும் வெடிப்புகள் நீங்கி பாதம் அழகு பெரும். வெடிப்பு வந்த பாதங்களை நீரில் கழுவி சூடு நீரில் தேனை கலந்து 30 நிமிடங்கள் வரை பாதங்களை அந்த நீரில் வைத்து பின்னர் வெடிப்புகளை நன்றாக துடைத்து பின்னர் தேன் களிம்பை பூசினால் நல்ல பயன் தரும். உடைந்த வெடிப்புகளில் வலி மற்றும் எரிச்சல் இருந்தால் மஞ்சள்மற்றும் வேப்பிலை இலைகள் மற்றும் சந்தன பொடியை நெய்யில் கலந்து வெடிப்புகளில் அடைத்து வைத்தால் எரிச்சல் மற்றும் வலி குறையும். ஓட்ஸ் பொடி செய்து அதற்கு ஆலிவ் எண்ணெய் கலந்து பேஸ்ட் செய்து தினமும் இரவுகளில் உறங்கும் முன்னர் வெடிப்புகளில் தடவினாலும் மெல்ல மெல்ல வெடிப்புகள் மூடி சருமம் மென்மை பெரும். தவிர எள்ளெண்ணெயை சூடு செய்து ஒரு நாளைக்கு இரண்டு முறை உடைந்த வெடிப்புக்குகள் மீது மசாஜ் செய்யவும். தினமும் இரவு தூங்கும் முன்னர் ஒரு பாத்திரத்தில் சூடு நீரை ஊற்றி அதில் சற்று உப்பு கலந்து 15 நிமிடங்கள் வரை இரண்டு பாதங்களையும் வைத்திருக்கவும். பின்னர் கால்களை துடைத்து அலோவேரா ஜெல் தடவி படுத்துகொண்டால் உடைந்த வெடிப்புகள் விரைவில் கூடி விடும்.