வெண்டைக்காய் புளி குழம்பு

தேவையான பொருட்கள்
புளி சாறு
வெல்லம்
பச்சை மிளகாய்
மஞ்சள் தூள்
உப்பு
வெண்டைக்காய்
துவரம் பருப்பு
தண்ணீர்
கொத்துமல்லி
தாளிப்புக்கு :
எண்ணெய்
கடுகு
உளுத்தம் பருப்பு
பெருங்காயம்
சிவப்பு காய்ந்த மிளகாய்
கறிவேப்பிலை
செய்யும் முறை: முதலில் பெரிய கடாயில் ஒன்றரை கப் புளி சாறு , பெரிய துண்டு வெல்லம் ,மூன்று பச்சை மிளகாய் , கால் ஸ்பூன் மஞ்சள் தூள் , சில கறிவேப்பிலை இலைகள் மற்றும் ஒரு ஸ்பூன் உப்பு ஆகியவற்றை எடுத்து கொள்ளவும். புளி சாறை கொதிக்க விடவும். பின்னர் பத்து வெண்டைக்காயை சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் அதை மூடி வெண்டைக்காய் நன்றாக வேகும் வரை வேக விடவும். மேலும் ஒன்றரை கப் துவரம் பருப்பு மற்றும் அரை கப் நீர் ஒற்றி நன்றாக கலக்கவும். மீண்டும் மூன்று நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர் சிறிய கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் ஒரு ஸ்பூன் கடுகு , ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு , சிட்டிகை பெருங்காயம், ஒரு உலர்ந்த சிவப்பு மிளகாய் , மற்றும் சில கறிவேப்பிலை இலைகளை போட்டு தாளிக்கவும். பின்னர் கொதிக்க வைத்துள்ள புளி , வெண்டைக்காய் குழப்பில் தாளிப்பை ஊற்றவும். இரண்டு ஸ்பூன் கொத்துமல்லியை சேர்க்கவும் . இதை நன்றாக கலந்து சிறிது சூடாக்கி இந்த சுவைமிகு வெண்டைக்காய் புளி குழம்பை சூடான சாதத்துடன் கலந்து சாப்பிடவும்.