வெண்ணெய் முறுக்கு

தேவையான பொருட்கள்
ஒரு கப் அரிசி மாவு
கால் கப் உரித்த கடலை
கால் கப் கடலை மாவு
ஒரு ஸ்பூன் சீரகம்
பெரிய சிட்டிகை பெருங்காயம்
பெரிய சிட்டிகை மஞ்சள் தூள்
ஒரு எலுமிச்சை அளவில் வெண்ணெய்
ருசிக்கேற்ப உப்பு
வறுக்க எண்ணெய்
செய்யும் முறை : உரித்த கடலையை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும். ஒரு அகன்ற பாத்திரத்தில் அரிசி மாவை எடுத்துக்கொள்ளவும். அதில் உரித்த கடலை மாவை சேர்க்கவும் பின்னர் கடலை மாவையும் சேர்த்து நன்றக கலக்கவும். அதன் பின்னர் சீரகம், பெருங்காயம், மஞ்சள் தூள் , மற்றும் உப்பு போட்டு நன்றாக கலக்கவும். தேவையெனில் மிளகாய் தூளையும் சேர்க்கலாம். பின்னர் வெண்ணையை சேர்க்கவும். நன்றாக கலந்து பிசையவும். சிறிதளவு நீரை சேர்த்து பிசையவும். கெட்டியான மற்றும் நைஸான மாவாய் பிசைந்து கொள்ளவும். முறுக்கு பிழிய போதுமான அளவில் கெட்டியாக இருந்தால் போதும். பின்னர் எண்ணையை கடாயில் ஊற்றி சூடாக்கவும். முறுக்கு குழாயை கொண்டு மாவை அதில் திணித்து நேராக காய்ந்த எண்ணெயில் முறுக்கு பிழியவும். மிதமான தீயில் வேக விடவும் . சத்தம் மற்றும் நுரைகள் மொத்தமும் நின்ற பின்னர் கடாயில் இருந்து வெளியே எடுத்தால் கம கம வெண்ணெய் முறுக்கு மொறு மொறுவென உண்பதற்கு தயார்.