வெயில் தாக்கம் அதிகரிப்பு: ஆரோக்கியத்தில் கவனம் தேவை

பெங்களூரு, மார்ச் 15: கொளுத்தும் கடுமையான வெயிலால் பெங்களூரு உள்ளிட்ட ஊரக மாவட்டத்தில் மக்கள் அவதிப்படுகின்றனர். காலை மற்றும் மாலை என்ற வேறுபாடு இல்லாமல் வெயில் சுட்டெரிப்பதால் மக்களுக்கு பல நோய்கள் தோன்றுகின்றன. இதன் காரணமாக சுகாதாரத் துறையும் ஆரோக்கிய‌த்தில் அக்கறை செலுத்த அறிவுறுத்தியுள்ளது.
பெங்களூரு ஊரக மாவட்டத்தின் 4 தாலுகாக்களான தொட்டபள்ளாபூர், ஹோஸ்கோட்டை, நெலமங்களா மற்றும் தேவனஹள்ளி ஆகிய இடங்களில் மழை இல்லாததால் இந்த முறை வறட்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கோடை மழையும் ஏமாற்றி உள்ளது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்கள் நொடிக்கு நொடி சோர்ந்து போகின்றனர்.
குழந்தைகளும் அடிக்கடி நொடியால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் நீர் சத்துள்ள‌ உணவு முறை உள்ளிட்ட பல ஆலோசனைகளை சுகாதாரத் துறை வழங்கி வருகிறது. இதுதவிர குளிர்பானங்களுக்கு மக்கள் அலைமோதுவதால், தர்பூசணி, எலுமிச்சை, இளநீர் உள்ளிட்ட பலவற்றின் விலையும் உயர்ந்து வருகிறது.
பெங்களூரு கிராமப்புறங்களில், நதி ஆதாரங்கள் இல்லாமல், தண்ணீர் பிரச்சனை பொதுவானது. இதுதவிர, இம்முறை கோடைக்கு முன், அதாவது ஜனவரி மாத இறுதியில் இருந்தே வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக கடந்த 2 வாரங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸிலிருந்து 34 டிகிரி செல்சியஸாக அதிகரித்துள்ளது.
இதனால், காலை மற்றும் இரவு நேரங்களில் மக்கள் சிரமப்படுகின்றனர். பிற்பகல், சூரியனின் கதிர்களின் தாக்கம் அதிகம் உள்ள‌து. வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு மக்களிடையே காணப்படுவதால், மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
பெங்களூரு ஊரக மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், உடல்நிலையில் அக்கறை செலுத்த மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, தண்ணீர், நீர்ச்சத்து நிறைந்த உணவு, பழச்சாறு, பழங்கள் உள்ளிட்ட ஆரோக்கியமான மற்றும் குளிர்ச்சியான உணவுகளை உட்கொள்வது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.