வெயில் தாக்கம் 3 முதியோர் சாவு

கொல்கத்தா : ஜூன். 12 – மேற்கு வங்காளத்தின் 24 பரகுனா மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் மூன்று பக்தர்கள் உயிர் இழந்ததாக முதல்வர் மமதா பானர்ஜீ தெரிவித்துள்ளார். கோயில் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆன்மீக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த போது மூன்று பக்தர்கள் இறந்துள்ள சம்பவம் நடந்துள்ளது. ஆனால் வெய்யில் கொடுமையால் மூன்று பக்தர்கள் இருந்துள்ளதாக அந்த மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். சம்பவம் நடந்த இடத்திற்கு மாவட்ட அதிகாரி நேரில் சென்று ஆய்வு நடத்தி வருவதாகவும் முதல்வர் மமதா பானர்ஜீ தெரிவித்துள்ளார்.